நடப்பு ஆண்டில் தமிழகத்தில் 35,400 பேருக்கு காசநோய் பாதிப்பு


நடப்பு ஆண்டில் தமிழகத்தில் 35,400 பேருக்கு காசநோய் பாதிப்பு
x
தினத்தந்தி 30 Jun 2021 3:24 PM IST (Updated: 30 Jun 2021 3:24 PM IST)
t-max-icont-min-icon

நடப்பு ஆண்டில் தமிழகத்தில் 35,400 பேருக்கு காசநோய் பாதிப்பு.

சென்னை,

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த 2 மாதங்களில் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் 9.10 லட்சம் பேருக்கு அந்த நோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 35,400 பேருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. அவர்களில், தனியார் ஆஸ்பத்திரிகளில் 7,592 பேரும், அரசு ஆஸ்பத்திரிகளில் 27,808 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 37,834 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story