வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை
வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை பூங்கா நிர்வாகம் தகவல்.
வண்டலூர்,
கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதி முதல் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் 3-ந்தேதி பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் நீலா (வயது 9), பத்மநாபன் (12) என்ற 2 சிங்கங்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இந்த நிலையில் 5 வயதுடைய பிரகுர்தி மற்றும் ரோகினி என்ற 2 பெண் யானைகளுக்கு சார்ஸ் கோவிட்-2 வைரஸ் தொற்று பரிசோதனைக்காக அதன் துதிக்கை மற்றும் மலப்புழையில் எடுத்த மாதிரிகள் கடந்த 18-ந்தேதி போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய் பகுப்பாய்வு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. மேலும் பூங்காவில் உள்ள பீஷ்மர் (16) என்ற ஆண் வெள்ளைப்புலியின் மாதிரியும் அனுப்பப்பட்டது. சோதனை முடிவுகளின் படி தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய் பகுப்பாய்வு நிறுவனம் மேற்கண்ட அனைத்து மாதிரிகளும் சார்ஸ் கோவிட்-2 வைரஸ் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
இந்த தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story