விண்ணப்பித்த 15 நாளில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை


விண்ணப்பித்த 15 நாளில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Jun 2021 6:38 PM IST (Updated: 30 Jun 2021 6:38 PM IST)
t-max-icont-min-icon

விண்ணப்பித்த 15 நாளில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு.

சென்னை,

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நகர நிர்வாக அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

சென்னையில் தற்போது நாள் ஒன்றுக்கு வினியோகிக்கப்பட்டு வரும் சுமார் 850 மி.லி. குடிநீரை ஆயிரத்து 146 மி.லி. அளவுக்கு உயர்த்தி வழங்கவும், குடிநீர் குழாய் இணைப்புக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு 15 நாட்களில் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளவும், சென்னையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள குடிநீர் குழாய்கள் அனைத்தையும் புனரமைத்து குடிநீர் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் அதிகாரிகளுக்கு நேரு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கூடுதல் தலைமை செயலாளர் சாய்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story