வாணாபுரம் அருகே அரிய வகை நட்சத்திர ஆமை பிடிபட்டது


வாணாபுரம் அருகே அரிய வகை நட்சத்திர ஆமை பிடிபட்டது
x
தினத்தந்தி 30 Jun 2021 9:10 PM IST (Updated: 30 Jun 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே அரிய வகை நட்சத்திர ஆமை பிடிபட்டது.

வாணாபுரம்,

வாணாபுரம் அருகே உள்ள துருவம் பகுதியில் நேற்று காலை அரிய வகை ஆமை ஒன்று அவ்வழியாக ஊர்ந்து வந்தது. இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அந்தப் பகுதிக்கு வந்து ஆமையை மீட்டு அப்பகுதியில் உள்ள குளத்தில் விட்டு சென்றனர். பிடிபட்ட ஆமை நட்சத்திர ஆமை என வனத்துறையினர் தெரிவித்தனர். அழகாக நட்சத்திர வடிவில் இருப்பதால் அதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் பார்த்து சென்றனர்.

Next Story