ரூ.2 கோடியில் மதகுகள் சீரமைக்கும் பணி
மருதாநதி அணையில் ரூ.2 கோடியில் மதகுகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. இந்த அணையில் உள்ள பாசன, ஆற்று மதகுகள் அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகி விட்டது. இதனால் மதகுகள் துருப்பிடித்தும், அரிப்பு ஏற்பட்டும் தண்ணீர் கசிந்து வந்தது. இதைக்கருத்தில் கொண்டு மதகுகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.2 கோடியில் மதகுகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனையடுத்து மதகுகளை பழுது நீக்கி, தண்ணீர் கசியாத வண்ணம் புதுப்பித்து வண்ணம் தீட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தற்போது அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் இருப்பதால், மாற்று மதகுகளை இயக்கி தண்ணீர் வெளியேறாத வகையில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளை அணையின் உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், உதவி பொறியாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story