குடிசை மாற்றுவாரிய வீடுகளை பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்


குடிசை மாற்றுவாரிய வீடுகளை பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 30 Jun 2021 10:27 PM IST (Updated: 30 Jun 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம், கூடலூர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தமபாளையம்:
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் உத்தமபாளையம் அருகே கோம்பையில் 480 வீடுகளும், சின்னமனூர் அப்பிபட்டியில் 432 வீடுகளும், கூடலூர் அருகே தம்மனம்பட்டியில் 240 வீடுகளும் என மொத்தம் 1,152 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய திட்டத்தின்கீழ் தகுதி உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. முன்னுரிமை அடிப்படையில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலை புறம்போக்கு, மயான புறம்போக்கு உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட உள்ளது. அதன்பிறகு வீடுகள் இல்லாத ஆதரவற்றவர்கள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு தேனி மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 
இந்தநிலையில் குடிசை மாற்று வாரிய வீடுகளை பெற விரும்பும் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம், உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இந்த முகாமில் குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் மணிபாலன், இளநிலை பொறியாளர் சுப்புலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு, நேரடியாக பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றனர். இதில் உத்தமபாளையம், கூடலூர், கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு உரிய ஆவணங்களுடன் வீடுகள் கேட்டு விண்ணப்பங்கள் அளித்தனர். இந்த முகாம் வருகிற 7-ந்ேததி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story