ஊட்டி விளையாட்டு மைதானத்தில் ‘செல்பி ஸ்பாட்’
ஊட்டி விளையாட்டு மைதானத்தில் ‘செல்பி ஸ்பாட்’.
ஊட்டி,
ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஊட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எச்.ஏ.டி.பி. திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்திய ஒலிம்பிக் அணியை உற்சாகப்படுத்த, இந்த செல்பி ஸ்பாட்டில் புகைப்படம் எடுத்து கொள்ளலாம். கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜான்சன் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் கலந்துகொண்டார். அவர் ஊட்டியில் மலை மேலிட பயிற்சி மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் செல்பி எடுத்து கொண்டார். இந்த தகவலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story