தடுப்பூசி போட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அறிய 30 பேரிடம் ரத்தமாதிரி சேகரிப்பு


தடுப்பூசி போட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அறிய 30 பேரிடம் ரத்தமாதிரி சேகரிப்பு
x
தினத்தந்தி 30 Jun 2021 10:45 PM IST (Updated: 30 Jun 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி போட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அறிய 30 பேரிடம் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டது.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்களின் எதிர்ப்பு சக்தியை கண்டறிய வா.சந்திராபுரம் மற்றும் சின்ன வதம்பச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில், கிராமங்களில் பூஜ்ஜியம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கணக்கெடுப்புக்கு ஒரு கிராமத்தில் 30 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கரும்புரவிபாளையத்தில் டாக்டர் பவித்ரா தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். 

இதன் மூலம்  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் போடாத பொதுமக்களுக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல், நோய் எதிர்ப்பு ஆகியவற்றை கண்டறிய முடியும். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் மேற்பார்வையாளர் முருகதாஸ் ஆகியோர் செய்து இருந்தனர்.

அப்ப நாயக்கன்பட்டியில் இரும்பு தயாரிப்பு கம்பெனியில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் 86 பேருக்கு டாக்டர் சூர்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்து சளி மாதிரிகளை சேகரித்தனர்.

 அப்போது, சுல்தான்பேட்டை வட்டாரத்தில் மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் குறைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story