விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை திட்டங்களை கலெக்டர் மோகன் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை திட்டங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் டி.மோகன் ஆய்வு மேற்கொண்டார். தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட்டு ராதாபுரத்தில் உள்ள ஒரு வயலில் அமைக்கப்பட்டுள்ள நிழல்வலை குடிலில் குழித்தட்டுகளில் மிளகாய், கத்தரி மற்றும் பப்பாளி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து மதுரப்பாக்கம் கிராமத்தில் மேலாண்மை இனத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிப்பம் கட்டும் அறையை கலெக்டர் டி.மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகள் பயன்பெற அறிவுரை
மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் எம்.குச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் நிரந்தர கல்பந்தல் அமைத்து சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வரும் புடலை, கோவற்காய் வயல்களை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த விவசாயிகளிடம் இத்திட்டங்களின் பயன்கள் குறித்து கேட்டறிந்ததோடு இதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story