சாலையில் ரேஷன் அரிசியை கொட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடையில் தரமில்லா அரிசி வழங்கப்படுவதை கண்டித்து சாலையில் ரேஷன் அரிசியை கொட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
ரேஷன் கடையில் தரமில்லா அரிசி வழங்கப்படுவதை கண்டித்து சாலையில் ரேஷன் அரிசியை கொட்டி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு கடைகளிலும் தரமில்லா அரிசி வழங்கப்படுவதை கண்டித்தும், மத்திய அரசு தொகுப்பில் இருந்து வழங்கப்பட்ட தரமான அரிசியை வினியோகிக்காததை கண்டித்தும் ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில வழக்கறிஞர் அணி தலைவர் வக்கீல் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன், நகர தலைவர் மோடி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷமிட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மாதா மாதம் 20 கிலோ அரிசி வழங்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிவாரணங்களை பல்வேறு மாவட்டகளில் முழுமையாக வழங்கப்படாததை கண்டித்தும், தற்போது கூட்டுறவு ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதை கண்டித்தும் கோஷமிட்டனர். மேலும் பா.ஜ.க.வினர் ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி தமிழக அரசை கண்டித்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிரணி தலைவர் சித்ரா, மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட பட்டியல் அணி தலைவர் ஈழவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story