ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வெடிகுண்டு வைத்த 3 பேர் கைது


ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வெடிகுண்டு வைத்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2021 11:26 PM IST (Updated: 30 Jun 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

வனவிலங்குகளை வேட்டையாட வெடிகுண்டு வைத்த 3 பேர் கைது

ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த குட்டகந்தூர் அருகே உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு சென்ற கறவை மாடு ஒன்று நாட்டு வெடிகுண்டை கடித்து தாடை கிழிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் மாட்டின் உரிமையாளர் ஸ்ரீராமுலு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைத்ததாக மிட்டாளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிகளான குமார் (வயது 30), பாலாஜி (31) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுட்ட குண்டா கிராமத்தில் விவசாயி தட்சிணாமூர்த்தி என்பவரின் பசுமாடு இதேபோன்று நாட்டு வெடிகுண்டை கடித்து வாய் கிழிந்தது. இதுகுறித்த உமராபாத் போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

Next Story