தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்


தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 30 Jun 2021 11:43 PM IST (Updated: 30 Jun 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங் களை நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

கோவை

கோவை மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங் களை நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். 

போக்குவரத்து நெரிசல்

கோவையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால் கோவை மாநகர பகுதியில் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. 

குறிப்பாக அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப் பாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. 

குறிப்பாக ரெயில் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, உக்கடம்- ஆத்துப்பாலம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். 

வாகனங்கள் நிறுத்தம் 

இந்த நிலையில் கோவையில் அரசு ஆஸ்பத்திரி, ரெயில் நிலையம், அரசு கல்லூரி சாலைகளில் தடை செய்யப்பட்ட இடங்களில் (நோ-பார்க்கிங்) வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அந்தப்பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- 

ஊரடங்கு காலத்தில் சாலையில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. இதனால் நோ-பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தியதால் எவ்வித பாதிப்பும் இல்லை. 

ஆனால் தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளதால், நோ-பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தும்போது கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே நோ-பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைப்பதை தடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story