நீண்ட நாட்களாக தேங்கிக்கிடந்த 700 டன் குப்பைகள் அகற்றம்
நீண்ட நாட்களாக தேங்கிக்கிடந்த 700 டன் குப்பைகள் அகற்றம்
கோவை
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் நீண்ட நாட்களாக தேங்கியிருந்த கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு வாரமாக தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
இதன்படி மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில், 105 இடங்களில் ஒரு வாரம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் கிழக்கு மண்டலத்தில் 222 டன், மேற்கு மண்டலத்தில் 138 டன், வடக்கு மண்டலத்தில் 172 டன், தெற்கு மண்டலத்தில் 70 டன், மத்திய மண்டலத்தில் 99.5 டன் என மொத்தமாக 701.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story