வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை திருட்டு


வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 1 July 2021 12:04 AM IST (Updated: 1 July 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை திருட்டு

திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே மானகிரி தில்லைநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி லதா(வயது 40). சுப்பிரமணியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் லதா, தனது மகன் விஜயுடன் இளங்குடியிலுள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை இளங்குடியிலிருந்து மானகிரிக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து 12 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து நாச்சியாபுரம் போலீஸ் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story