2 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 15806 பேர்கள் தடுப்பூசி போட்டு உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 15806 பேர்கள் தடுப்பூசி போட்டு உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தடுப்பு நடவடிக்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த மாவட்டத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 806 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 435 பேர் முதல் தவணையாக தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் 28 ஆயிரத்து 371 பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி போட்டு உள்ளனர். இதேபோல 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அரசு அனுமதி அளித்துள்ளதன் பேரில் இதுவரை 74 ஆயிரத்து 730 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி
தற்போது அரசின் அறிவுறுத்தலின் பேரில் பிரசவித்த பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி கையிருப்பை பொருத்து வரவர தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்சாலைகள் மற்றும் கிராமங்கள் போன்ற இடங்களில் முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story