16½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
காய்ச்சல் முகாம்களில் 16½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற அரசின் வழிகாட்டுதலை கடைப்பிடிப்பதன் மூலமாக மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இதுவரை கொரோனா தொற்றினால் 17,624 பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கிராம ஊராட்சிப்பகுதிகளில் 9,517 பேரும் (55 சதவீதம்), பேரூராட்சிப் பகுதிகளில் 2,467 பேரும்(11 சதவீதம்), நகராட்சிப் பகுதிகளில் 5,640 பேரும்(34 சதவீதம்) பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16,816 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 189 பேர் இறந்துள்ளனர். 619 பேர் தற்போது தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இம்மாவட்டத்தில் தினசரி சராசாரியாக 1,300 முதல் 1,400 நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 3,53,513 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,441 படுக்கை வசதிகள் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் 1,349 படுக்கை வசதிகளும், தனியார் மருத்துவமனைகளில் 276 படுக்கை வசதிகளும், அரசு மருத்துவமனைகளில் 186 ஐ.சி.யூ. படுக்கை வசதிகளும், தனியார் மருத்துவமனைகளில் 69 ஐ.சி.யூ.. படுக்கை வசதிகளும் உள்ளன.
மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 39,461 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு முகாம்களில் இதுவரை 16,57,587 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story