கரூர் ஜவகர் பஜாரில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 50 கடைகளுக்கு அபராதம்


கரூர் ஜவகர் பஜாரில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 50 கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 1 July 2021 12:45 AM IST (Updated: 1 July 2021 12:45 AM IST)
t-max-icont-min-icon

கரூர் ஜவகர் பஜாரில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 50 கடைகளுக்கு அபராதம் விதித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கரூர்
போக்குவரத்து நெரிசல்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கரூர் உள்பட 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி அரசு அனுமதி இல்லாமல் நேற்று காலை கரூர் ஜவகர் பஜாரில் உள்ள நகைக்கடைகள், துணி கடைகள், கவரிங் நகைக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தன. 
இதனால் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் கரூர் ஜவகர் பஜாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
அபராதம் 
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், தாசில்தார் சக்திவேல் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் ஆகியோர் கொண்ட குழுவினர் வந்தனர். பின்னர் கரூர் ஜவகர்பஜார் சாலையில் உள்ள காமராஜர் சிலையில்  இருந்து வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும்உள்ள கடைகளை திறந்து வியாபாரம் செய்த நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திர கடைகள் உள்ளிட்ட ஆய்வு செய்து, ஊரடங்கை மீறி செயல்பட்ட  50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story