மடத்துக்குளத்தில் வக்கீல்கள் திடீர் சாலை மறியல்


மடத்துக்குளத்தில் வக்கீல்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 July 2021 12:55 AM IST (Updated: 1 July 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளத்தில் வக்கீல்கள் திடீர் சாலை மறியல்

போடிப்பட்டி, 
வக்கீல்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் அதனை வாபஸ் வாங்க வேண்டும் என்று கூறி நேற்று மடத்துக்குளத்தில் வக்கீல்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பலத்த காயம்
குமரலிங்கத்தையடுத்த பார்த்தசாரதிபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் மகன் சென்னியப்பன் (வயது 32). வக்கீலாக பணியாற்றி வருகிறார்.சென்னியப்பனின் உறவினர் சரவணனிடம் அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார், வீரமணி உள்ளிட்ட சிலர் தகராறு செய்து தாக்கியுள்ளனர்.
மேலும் இதனை தடுக்கச் சென்ற சென்னியப்பனையும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சென்னியப்பன் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சாலை மறியல்
இந்த சம்பவம் குறித்து சென்னியப்பன் குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் செந்தில்குமார் உட்பட 6 பேர் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் 4 பேர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சென்னியப்பன், அவருடைய தந்தை ஆகியோர் மீது எதிர்தரப்பினர் பொய்யான புகார் அளித்துள்ளனர் என்றும்,  போலீசார் அவர்களுக்கு ஆதரவாக  செயல்படுவதாகவும், ஏற்கனவே சென்னியப்பன் ஆஜராகி வந்த வழக்கிலிருந்து இவரை வெளியேறக் கூறி மிரட்டும் விதமாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், எனவே சென்னியப்பன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும்.மேலும் சென்னியப்பன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் அருகில் அமர்ந்து  வக்கீல்கள் திடீர் சாலை மறியல் செய்தனர். 
பேச்சுவார்த்தை
இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக போலீசார் உறுதியளித்ததைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story