விஷம் குடித்த இளம்பெண் சாவு; கணவன் கவலைக்கிடம்


விஷம் குடித்த இளம்பெண் சாவு; கணவன் கவலைக்கிடம்
x
தினத்தந்தி 1 July 2021 1:19 AM IST (Updated: 1 July 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே விஷம் குடித்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார். கணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரதட்சணைக்காக நடந்த இந்த தகராறு விபரீதத்தில் முடிந்தது.

தளவாய்புரம், 
ராஜபாளையம் அருகே விஷம் குடித்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார். கணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரதட்சணைக்காக நடந்த இந்த தகராறு விபரீதத்தில் முடிந்தது.
இளம் தம்பதி 
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள சுந்தரராஜபுரம் சாவடி தெருவை சேர்ந்தவர், வனத்துரை (வயது 30), கூலித்தொழிலாளி.  இவருடைய மனைவி மலர்க்கொடி (24). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். 
வரதட்சணையாக மலர்க்கொடியின் பெற்ேறார் கொடுக்க வேண்டிய பணம், நகையை கொடுக்கவில்லையாம்.
இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு வரதட்சணையாக பேசிய பணம், நகையை வாங்கி வரும்படி மலர்க்கொடியையும், குழந்தைகளையும் சேத்தூர் பகுதியில் உள்ள மாமனார் வீட்டில் விட்டுவிட்டு வனத்துரை சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மாமனார் வீட்டிற்கு சென்று மனைவி, குழந்தைகளை தனது ஊருக்கு வனத்துரை மீண்டும் அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் இருவரும் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தனர். 
மனைவி சாவு
பின்னர் இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு டாக்டர்கள், பரிசோதனை செய்ததில் மலர்க்கொடி இறந்துவிட்டது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் வனத்துரை சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுகுறித்து சேத்தூர் புறநகர் போலீசில் மலர்க்கொடியின் தந்தை  சிங்கராஜ் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்குப்பதிவு செய்தார். இதுகுறித்து சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story