கோவிலில் நகை திருட்டு
பழவூர் அருகே கோவிலில் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
வடக்கன்குளம்:
பழவூர் அருகே சாலைப்புதூர் கிராமத்தில் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து, அங்கிருந்த 11 பவுன் தங்க நகைகளை மர்மநபர் திருடிச் சென்றுவிட்டார். தகவல் அறிந்ததும் பழவூர் போலீசார் சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர் தன்னுடைய முகத்தை துணியால் மறைத்துக் கொண்டும், கைகளில் கை உறை அணிந்து நகைகளை திருடிச்சென்றும் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சகாயசாந்தி விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story