வாகனம் மோதி ஒருவர் பலி
வீரகேரளம்புதூர் அருகே வாகனம் மோதி ஒருவர் பலியானார்.
சுரண்டை:
வீரகேரளம்புதூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கடற்கரை நாடார் மகன் வேல்முருகன் (வயது 42). இவர் கடந்த சம்பவத்தன்று அடைக்கலபட்டணம் அருகே அழகாபுரி கிராமத்தில் உள்ள தனது அத்தை வீட்டிற்குச் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அத்தியூத்து - சுரண்டை ரோட்டில் உள்ள சுடலைமாடசாமி கோவில் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வேல்முருகன் படுகாயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காஜா மைதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story