குடும்பத்தகராறில் ஒருவர் கொலை


குடும்பத்தகராறில் ஒருவர் கொலை
x
தினத்தந்தி 1 July 2021 1:51 AM IST (Updated: 1 July 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

பரமக்குடி
பரமக்குடி அருகே உள்ள நென்மேனி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமாறன். இவரது மகள் புவனேசுவரி என்பவரை அதே ஊரை சேர்ந்த ராஜா என்பவர் திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் புவனேசுவரியின் தாயார் சுசிலா சுகுமாறன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ராமமூர்த்தி என்பவர் வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுகுமாறன் மனைவி பாலம்மாள் அவருடன் தகராறு செய்துள்ளார். பின்னர் இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது பாலம்மாள் ராமமூர்த்தியை  தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் மற்றும் பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலம்மாள், சுகுமாறனை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். 

Next Story