கொரோனாவுக்கு மனைவி உயிர் இழந்ததால் 2 மகள்களுடன் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


கொரோனாவுக்கு மனைவி உயிர் இழந்ததால் 2 மகள்களுடன் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 July 2021 2:32 AM IST (Updated: 1 July 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே கொரோனாவுக்கு மனைவி உயிர் இழந்ததால், 2 மகள்களுடன் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் நடந்துள்ளது.

பெங்களூரு:

கொரோனாவுக்கு பெண் சாவு

  பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திபெலே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ் (வயது 46). இவருக்கு கீர்த்தி (18) மற்றும் மோனிஷா (14) என்ற மகள்கள் இருந்தார்கள். நாகராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நாகராஜின் மனைவி கடந்த மாதம் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவர் பலனின்றி இறந்து விட்டார்.

  மனைவி இறந்ததால் நாகராஜிம், தாயை இழந்த சோகத்தில் கீர்த்தி மற்றும் மோனிஷா ஆகியோர் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. நேற்று காலையில் நாகராஜின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அத்திபெலே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து ந்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது நாகராஜ், அவரது மகள்கள் கீர்த்தி, மோனிஷா தூக்கில் பிணமாக தொங்கினார்கள்.

3 பேர் தற்கொலை

  அவர்களது உடல்களை கைப்பற்றி போலீசார் விசாாித்தனர். அப்போது நேற்று முன்தினம் இரவே நாகராஜ், அவரது மகள்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் நாகராஜின் மனைவி கொரோனாவுக்கு உயிர் இழந்ததால் மனம் உடைந்து வாழ்ந்து வந்துள்ளார். அத்துடன் மகள்களின் எதிர்கால வாழ்க்கை குறித்தும் அவர் கவலை அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து, தற்கொலை செய்ய அவர் முடிவு செய்ததாக தெரிகிறது.

  இதற்கு அவரது மகள்களும் சம்மதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவில் நாகராஜ், அவரது 2 மகள்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. இதுகுறித்து அத்திபெலே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆனேக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story