கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
பனைக்குளம்,
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புளி ரோட்டரி சங்கத்தின் சார்பில் பட்டைய தலைவர் வி.என்.நாகேஸ்வரன் கொரோனா தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்து தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் ராஜேசுவரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தொடங்கி வைத்தார். முன்னதாக உச்சிப்புளி வட்டார மருத்துவ அலுவலர் ஆரம்ப சுகாதார மருத்துவருமான சுரேந்தர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் ஆகியோர்களின் ஆலோசனையின் படி, ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், உச்சிப்புளி சுகாதார ஆய்வாளர் கேசவமூர்த்தி ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டனர். நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் புதுமடம் காமில் உசேன், பெருங்குளம் சிவகுமார் மற்றும் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஜெயபாலன், முன்னாள் செயலாளர் கண்ணன், தனசேகரன், தர்மராஜ், மருங்கப்பன், தாமரைச்செல்வன், சக்திநாதன், சக்தீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன. முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்தர், பயனாளிகள் மற்றும் பள்ளிக்கூட தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பயனாளிகளுக்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி தெரிவித்தார்.
Related Tags :
Next Story