சேலம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


சேலம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 1 July 2021 2:39 AM IST (Updated: 1 July 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஓமலூர்
ஓமலூரில் உள்ள சேலம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஓமலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் 340 பேருக்கு கொேரானா நிவாரணமாக 10 கிலோ அரிசி, 15 கிலோ மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓமலூர் எம்.எல்.ஏ. மணி தலைமை தாங்கினார். மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சந்திரசேகரன் எம்.பி., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, எம்.எல்.ஏ.க்கள் சுந்தரராஜன், பாலசுப்பிரமணியம், நல்லதம்பி, ராஜா என்ற ராஜமுத்து, சித்ரா, ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அசோகன், ராஜேந்திரன், கோவிந்தராஜ், மணிமுத்து, சேரன் செங்குட்டுவன், சுப்பிரமணியம், மாவட்ட இணை செயலாளர் ஈஸ்வரி பாண்டுரங்கன், மாவட்ட கவுன்சிலர் மல்லிகா ராஜேந்திரன், நகர செயலாளர்கள் சரவணன், கணேசன், கோவிந்தசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story