திருவொற்றியூரில் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் வழங்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


திருவொற்றியூரில் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் வழங்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 July 2021 10:13 AM GMT (Updated: 1 July 2021 10:13 AM GMT)

தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரி தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.

திருவொற்றியூர்,

தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரி தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். அதன்படி திருவொற்றியூரில் தாங்கள் பணிபுரியும் ஏஜென்சி குடோன் முன்பு அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் ஆர்.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா காலத்திலும் எங்களது பணி பொதுமக்களுக்காக தொடர்ந்து நடைபெற்று வந்தது. எங்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கவேண்டும். தமிழகம் முழுவதும் எங்களது தொழிலாளர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு உள்ளனர். 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களது குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். ஏஜென்சிகள் எங்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., ஈ.பி.எப். போன்ற தொழிலாளர் நல சட்டங்களை மதித்து எங்களுக்கு வசதிகள் செய்து தரவேண்டும். இதற்கு எண்ணெய் நிறுவனங்கள் உதவி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களை பாதிக்காத வகையில் எங்களது போராட்டம் நடைபெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story