40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்


40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 1 July 2021 5:43 PM IST (Updated: 1 July 2021 5:43 PM IST)
t-max-icont-min-icon

40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சென்னை,

திருவள்ளூரை அடுத்த வயலூர் கிராமத்தில் நேற்று 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று அருகில் உள்ள காட்டில் இருந்து வெளியே வந்து சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. அந்த மான் திடீரென வயல்வெளியில் உள்ள 40 அடி ஆழம் கொண்ட நீர் நிறைந்து இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. நீண்டநேரம் தண்ணீரில் தத்தளித்தபடி வட்ட மடித்தபடி இருந்தது. இதை கண்ட விவசாயிகள் மப்பேடு போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புள்ளி மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பூண்டி காப்பு காட்டில் மானை பாதுகாப்பாக விட்டனர்.

Next Story