வேலூர் மாவட்டத்துக்கு 4,500 கொரோனா தடுப்பூசி மருந்து வருகை
வேலூர் மாவட்டத்துக்கு 4,500 கொரோனா தடுப்பூசி மருந்து வருகை
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் 11 நிரந்தர தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதைத்தவிர ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 3 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து வேலுர் மாவட்டத்துக்கு 4,500 கோவிஷீல்டு மருந்துகள் வந்தன. அவை தடுப்பூசி முகாம்கள், சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story