ரேஷன் பொருட்கள் வாங்க மீண்டும் விரல் ரேகை பதிவு


ரேஷன் பொருட்கள் வாங்க மீண்டும் விரல் ரேகை பதிவு
x
தினத்தந்தி 1 July 2021 8:34 PM IST (Updated: 1 July 2021 8:35 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் பொருட்கள் வாங்க மீண்டும் விரல் ரேகை பதிவு.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 16 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு நிறுத்தப்பட்டு இருந்தது இதனால் ஸ்மார்ட் கார்டை எந்திரத்தில் ஸ்கேன் செய்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

ந்த நிலையில் நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோ மெட்ரிக் முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ரேஷன் அட்டைகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கடைக்கு நேரில் வந்து விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். 

அதன் பின்னரே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று மாதத்தின் முதல் நாள் என்பதால் பொதுமக்கள் விரல் ரேகையை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர்.

Next Story