தஞ்சையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி தஞ்சையில் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு (எம்.எல்.) லிபரேசன், விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர்கள் குருசாமி, கிருஷ்ணமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆகியோர் தமிழமுதன் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) லிபரேஷன் மாவட்ட செயலாளர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் வரலாறு காணாத வகையில், உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும். இவற்றின் மீதான கலால் வரிகள் உடனடியாக குறைக்க வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுத்து, தங்குதடையின்றி பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வறிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அனைத்து குடும்பத்தினருக்கும், அடுத்த ஆறு மாத காலத்திற்கு மாதம்தோறும் 7,500 வழங்க வேண்டும். மத்திய தொகுப்பில் இருந்து 10 கிலோ உணவு தானியங்கள் மற்றும் அவசிய உணவுப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். நுண் நிதி நிறுவனங்களின் கடன்களை ஒத்திவைக்க வேண்டும். அனைத்து வயதினருக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தை வழங்க வேண்டும். வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
திருவையாறில் நடைபெற்ற ஆர்ப்பாடத்துக்கு மார்க்சிஸ்ட் ககம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை வகித்தார். இ்ந்திய கம்யூனிஸ்டு
ஒன்றியச் செயலாளர் சக்கரவர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொருளாளர் தென்னவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பெட்ரோல்- டீசல் விைல உயர்வை கண்டித்து ஒரு காரை கயிறு கட்டி இழுந்து வந்து கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story