வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மீண்டும் அமல்


வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மீண்டும் அமல்
x
தினத்தந்தி 1 July 2021 9:34 PM IST (Updated: 1 July 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மீண்டும் அமல்

வேலூர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பாதிப்பு காரணமாக கடந்த 2 மாதங்களாக ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இல்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, மண்எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளதால் மீண்டும் நேற்று முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 698 ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு நேற்று அமலுக்கு வந்தது. குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.

Next Story