கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 அடுக்கு பாதுகாப்பு
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கர வாத அமைப்பினர் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இதனால் நாடு முழுவதும் விமானப்படை, கடற்படை, தரைப்படை மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கோவை பீளமேடு அருகே சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. காஷ்மீர் தாக்குதலை அடுத்து கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன் அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தீவிர சோதனை
விமான நிலையத்திற்கு உள்ளே மற்றும் வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும் "மெட்டல் டிடெக்டர்" கருவி மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
கோவை விமான நிலையத்தின் முகப்பு பகுதியில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்கள் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கிறார்கள்.
டிரோன் பறக்க தடை
மேலும் விமான நிலையத்தை சுற்றிலும் 3 கி.மீ. தூரத்திற்கு டிரோன் (ஆளில்லா குட்டி விமானம்) பறக்க தடை செய்யப்பட்டு உள்ளது. தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே கோவை ரெட் பீல்டில் உள்ள கடற்படை, விமானப்படை பயிற்சி கல்லூரி, ராணுவ தளம் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த பகுதியிலும் 3 கி.மீ. தூரம் சுற்றளவுக்கு டிரோன் பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story