தோட்டத்தில் புகுந்த புள்ளிமான் மீட்பு
பரமன்குறிச்சி பகுதியில் தோட்டத்தில் புகுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
உடன்குடி:
பரமன்குறிச்சி மெயின் பஜாரை ஒட்டிய பகுதியில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புள்ளிமான் ஒன்று திரிவதாக வனத்துறையினருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர் அந்த தோட்டத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது, தோட்டத்திற்குள் கிடந்த தென்னை ஓலைகளுக்குள் சிறு காயங்களுடன் புள்ளிமான் ஓட முடியாமல் சிக்கியிருந்தது. மாவட்ட வன அலுவலர் செண்கப்பிரியா உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் ரவீந்திரன் தலைமையில் வனவர்கள் அப்பணசாமி, சுப்புராஜ், கருணாகரன், வனக்காப்பாளர் காசிராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர், காயமடைந்த புள்ளிமானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த மான் வல்லநாடு பகுதியில் உள்ள சரணாலயத்தில் விடப்பட்டது.
Related Tags :
Next Story