லோடு வேனில் கடத்தப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது


லோடு வேனில் கடத்தப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 1 July 2021 10:17 PM IST (Updated: 1 July 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே லோடு வேனில் கடத்தப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திகுளம் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளிலும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக சிறப்பு ரோந்து பணி மற்றும் வாகன சோதனை பணி நடத்தப்பட்டு வருகிறது.

விளாத்திகுளம் அருகே வில்வமரத்துப்பட்டி கிராம பகுதியில்  போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் தலா 60 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் 3 டன் ரேஷன் அரிசி  கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ் மகன் ராமசெல்வம் (வயது 36) என்பவரை கைது செய்தனர். மேலும் லோடு வேனுடன் 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த ரேஷன் அரிசியை குடிமைப்ெபாருள் குற்றப்புலனாய்வு துறையினரிடம் விளாத்திகுளம் போலீசார் ஒப்படைத்தனர்.

Next Story