காரைக்குடி.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை குறைக்க கோரி காரைக்குடி ஐந்து விளக்கு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்புசாமி, தாலுகா செயலாளர் சின்னக்கண்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச்செயலாளர் சாத்தையா, நகரச்செயலாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அபிநயா வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக கொரோனா நோய்த்தொற்று பரவும் விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் உள்பட 19 பேர் மீது வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.