பாலத்துறையில் மின்சாரம் நிறுத்தம்


பாலத்துறையில் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 1 July 2021 10:36 PM IST (Updated: 1 July 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

பாலத்துறையில் மின்சாரம் நிறுத்தம்

கோவை

கோவை மின் பகிர்மான தெற்கு வட்ட குனியமுத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட குறிச்சி கண்ணாம்பாநாயக்கனூர் சாலையில் ஆத்துமேடு என்ற இடத்தில் புதிதாக பாலம் கட்டுவதற்காக 4 உயர் அழுத்த மின்பாதை கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது.

எனவே மதுக்கரை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பாலத்துறை, நாச்சிபாளையம், வழுக்குப்பாறை, மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில்  வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று கோவை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஸ்டாலின் பாபு தெரிவித்து உள்ளார். 


Next Story