கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதன் எதிரொலி: அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டு புறநோயாளிகள் சிகிச்சை பிரிவாக மாற்றம்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதையடுத்து, அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டு பழையபடி புறநோயாளிகள் சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கடந்த சில மாதமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு அதிகமாகவும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
அப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக கொரோனா சிறப்பு வார்டு அமைத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு
இந்த நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட சீரிய முயற்சியின் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று திருவள்ளூர் மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வருகிறது. இதைத்தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தற்காலிகமாக அமைத்த கொரோனா சிறப்பு வார்டு தற்போது மீண்டும் பழையபடி புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மையமாக மாற்றப்பட்டுள்ளது.
தற்போது அங்கு புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த 80 ஆக்சிஜன் படுக்கைகளை அகற்றிவிட்டு புற நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது.

Related Tags :
Next Story