1 டன் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்ற வாலிபர் கைது


1 டன் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 July 2021 10:41 PM IST (Updated: 1 July 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.பேட்டையில் 1 டன் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஆர்.கே.பேட்டை பகுதிகளில் சிலர் ரேஷன் அரிசியை திருட்டுத்தனமாக கடத்தி ஆந்திராவில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் சென்னை மண்டல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், திருவள்ளூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் அதிகாரிகள் நேற்று திருவள்ளூரை அடுத்த அம்மையார்குப்பம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அப்போது அங்கு இருந்த ஆர்.கே.பேட்டை ராமாபுரம் பாடசாலை தெருவை சேர்ந்த பாலாஜி (வயது 34) என்பவர் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி அதனை ஆந்திராவிற்கு கொண்டு செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த 1,050 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து அவற்றை திருவள்ளூரில் உள்ள நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் பிடிபட்ட பாலாஜியை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Next Story