வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 July 2021 11:15 PM IST (Updated: 1 July 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

திருவிடையார்பட்டியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து வாலிபர் தீக்குளித்து முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்,

திருவிடையார்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவர் மகன் பாபு (வயது 35). இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டியுள்ளார். தனது ஆவணங்களை சமர்ப்பித்து திருவிடையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டுவரி ரசீதும் பெற்றுள்ளார். தனது ரசீதுடன் மின்வாரிய அலுவலகத்திற்கு மி்ன் இணைப்பு கேட்டு மனு செய்துள்ளார். சம்பந்தபட்ட அதிகாரிகள் ஊராட்சி மன்றத் தலைவர் மின் இணைப்புத் தரக்கூடாது என்றும் வீட்டு வரி ரசீதில் குளறுபடி உள்ளதாகவும் கூறி அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கேட்டும் பதில் வராததால் நேற்று ஊராட்சி மன்றக்கூட்டம் நடப்பதை அறிந்த பாபு அங்கு சென்றார். ஊராட்சிமன்றத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் தனது கோரிக்கையை கூறினார். பின்னர் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த அவர் தனது இருசக்கரவாகனத்தில் இருந்த பெட்ரோலை பிடித்து தீக்குளிக்க போவதாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது ஆவணங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அவரிடம் இது மேல் முறையீட்டுக்கு போகுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து திருவிடையார்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் கண்ணன் கூறுகையில், பாபுவின் அண்ணன் முத்துவேல் இந்த சொத்தில் தனக்கு பங்கு இருப்பதாக கூறியதால் மின் இணைப்புத்தரவேண்டாம் என்று கூறியதாக கூறினார்.


Next Story