காரைக்குடி,
அறந்தாங்கி பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுபைதா பேகம் (வயது 71). இவர் தனது இளைய மகன் அப்பாஸ் உடன் மோட்டார் சைக்கிளில் கொட்டாம்பட்டியில் இருக்கும் மூத்த மகன் காதர் மைதீனை பார்க்க சென்றார். அவரை பார்த்துவிட்டு மீண்டும் அறந்தாங்கி திரும்பியுள்ளனர். காரைக்குடி அருகே கோவிலூர் சாலையில் வரும்போது சாலையில் கிடந்த கற்களின் காரணமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த சுபைதா பேகம் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சுபைதாபேகம் உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.