குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழைநீர்


குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழைநீர்
x
தினத்தந்தி 1 July 2021 11:21 PM IST (Updated: 1 July 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழைநீர்

தாயில்பட்டி
வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி, தெற்கு ஆணை கூட்டம், கீழதாயில்பட்டி, சுப்பிரமணியபுரம், தாயில்பட்டி, மீனாட்சிபுரம், மடத்துப்பட்டி, மண்குண்டம்பட்டி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்தது. இதனால் தெருக்களிலும், வீடுகளிலும், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை 4 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கியதால் பட்டாசு ஆலைகள் முன்கூட்டியே பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டு தொழிலாளர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். வெற்றிலையூரணி ஊராட்சி சேர்ந்த அம்பேத்கர் காலனியில் சுமார் 60 குடும்பங்கள் வசிக்கின்றன. 
இப்பகுதியில் மழைநீர் செல்ல பாதை அமைக்கப்படாததால் மழைநீர் தேங்கி குடியிருப்புகள் உள்ளே புகுந்தது.

Next Story