தேவகோட்டை,
தேவகோட்டை நகர வர்த்தகர் சங்கம் மற்றும் முஸ்லிம் சமாஜ் சார்பில் தேவகோட்டை நகராட்சி (பொறுப்பு) ஆணையாளர் மதுசூதனன் தலைமையில் முகமதியார்பட்டினம் நகராட்சி திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் 18 வயது முதல் 60 வயது வரை உடைய பொதுமக்கள் 340 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினர் மாங்குடி தேவகோட்டை வட்டார பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகர வர்த்தக சங்கத்தலைவர் மகபூப் பாஷா, துணை செயலாளர் செல்வம், துணைத்தலைவர் எஸ்.பி.எஸ். சண்முகம், மாவட்ட இணைச்செயலாளர் மஸ்தான்கனி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மீராஉசேன், நகர தலைவர்கள் லோகநாதன், வக்கீல் சஞ்சய், மாவட்ட துணைத்தலைவர் அப்பச்சிசபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.