விருதுநகர், சிவகாசியில் மழை
விருதுநகர் சிவகாசியில் நேற்று பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
விருதுநகர்
விருதுநகர் சிவகாசியில் நேற்று பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
திடீர் மழை
சமீபகாலமாக மழை மறைவு பிரதேசமாக நீடித்து வரும் விருதுநகரில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. சுமார் 30 நிமிடங்களில் பெய்த மழையால் நகரின் பிரதான சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் பழைய பஸ் நிலையத்தை சுற்றிலும் மழை நீர் வெள்ளமாக ஓடியது. இதனால் பயணிகளுக்கும், பஸ் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. எனினும் நகரில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது.
சிவகாசி
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் இருந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. பின்னர் மாலை 5.30 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை சுமார் 30 நிமிடம் நீடித்தது. சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பெய்த 1 மணி நேர மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. கடந்த சில நாட்களாக சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதியில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Related Tags :
Next Story