ஒரே நாளில் பெயர்ந்த புதிய சாலை


ஒரே நாளில் பெயர்ந்த புதிய சாலை
x

காளையார்கோவில் அருகே ஒரே நாளில் புதிய சாலை பெயர்ந்தது. தரமாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டது.

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணியில் இருந்து மருதக்கண்மாய், ஊத்துப்பட்டி, ஒட்டாணம் வழியாக காளக்கண்மாய் கிராமத்திற்கு சாலை செல்கிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நெடுஞ்சாலைத்துறை சார்பில் மருதக்கண்மாயில் இருந்து ஒட்டாணம் வரை 2 கி.மீ.க்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
ஏற்கனவே உள்ள சாலையை பெயர்த்து எடுத்துவிட்டு, ஜல்லிக்கற்கள் பரப்பாமலேயே புதியச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தரமின்றி இருப்பதாக கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் இரவோடு, இரவாக சாலை அமைத்தனர். இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக வாகனங்கள் சென்றபோது சாலை ஆங்காங்கே சேதமடைந்தது. இதையடுத்து சாலையை ஆய்வு செய்ய சென்ற சாலை ஆய்வாளரிடம் கிராமமக்கள் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து ஒட்டாணத்தைச் சேர்ந்த பாஸ்கரன் கூறுகையில் சாலை அமைக்கும்போதே தரமில்லையென புகார் தெரிவித்தோம்.ஆனால் கண்டுகொள்ளாமல் சாலையை அமைத்தனர். சாலை தரமில்லாததால், கையால் பெயர்த்தாலேயே சாலை வந்துவிடுகிறது. சாலை அமைத்த ஒரே நாளில் ஆங்காங்கே பெயர்ந்து பள்ளமாக மாறிவிட்டது. இதனால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மருதுபாண்டியன் கூறுகையில், ‘ஒப்பந்ததாரரிடம் சாலையை தரமாக அமைக்க அறிவுறுத்தி உள்ளேன் என்றார்.


Next Story