கொல்லிமலையில் சீசன் முடிந்தும் தண்ணீர் கொட்டும் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி


கொல்லிமலையில் சீசன் முடிந்தும் தண்ணீர் கொட்டும் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி
x
தினத்தந்தி 2 July 2021 12:15 AM IST (Updated: 2 July 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலையில் சீசன் முடிந்தும் தண்ணீர் கொட்டும் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி

சேந்தமங்கலம்:
கொல்லிமலை வளப்பூர் நாடு ஊராட்சியில் பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோவில் உள்ளது. அதன் அருகே சுமார் 300 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டது போல தண்ணீர் கொட்டும் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. 
இதையடுத்து தற்போது மழை ஓய்ந்து சீசன் முடிந்தபோதும், மலையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியால் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கொல்லிமலைக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். இதன் காரணமாக கொல்லிமலையில் உள்ள பூங்கா, அருவிக்கு செல்லும் வழியில் மேம்பாட்டு பணி போன்றவை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story