கோட்டைப்பட்டினம் அருகே விசைப்படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு


கோட்டைப்பட்டினம் அருகே  விசைப்படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த  4 மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 2 July 2021 12:30 AM IST (Updated: 2 July 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

கோட்டைப்பட்டினம் அருகே விசைப்படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கோட்டைப்பட்டினம்:
விசைப்படகு 
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். 
இதில் அர்ச்சுனன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் என்ராஜ் (வயது 54), காஜா மைதீன் (45), அசாருதீன் (27), முகம்மது அபுபக்கர் (59) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
4 மீனவர்கள் தத்தளிப்பு 
இவர்கள் சுமார் 16 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது விசைப்படகின் அடியில் சிறு துளை ஏற்பட்டது. இதனால் படகுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சிறிது நேரத்தில் படகு முழுவதும் தண்ணீர் புகுந்து, படகு கடலில் மூழ்கியது. இதையடுத்து படகில் இருந்த 4 பேரும் கடலில் குதித்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும், விசைப்படகில் இருந்த டீசல் கேன், பலகைகளை பிடித்துக்கொண்டு கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். 
இதனை பார்த்த அருகே படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள், கடலில் தத்தளித்த 4 பேரையும் மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். விசைப்படகு தண்ணீருக்குள் மூழ்கியதால் படகில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்கள் கடலில் மூழ்கி வீணானது.

Next Story