பீடி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி; சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்
நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டியில் பீடி தொழிலாளர்களுக்கு சபாநாயகர் மு.அப்பாவு நிவாரண உதவி வழங்கினார்.
இட்டமொழி:
நாங்குேநரி, மூலைக்கரைப்பட்டியில் பீடி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
நிவாரண உதவி
நாங்குநேரி ரூரல் அப்லிப்ட் சென்டர் மூலம், நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் பீடி தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி ேநற்று நடந்தது. ஞானதிரவியம் எம்.பி., மாநில காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சபாநாயகர் மு.அப்பாவு பீடி தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
வெள்ளநீர் கால்வாய் திட்டம்
முன்பு தி.மு.க. ஆட்சியில் தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு வெள்ளநீர் கால்வாய் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. வரும் மழைக்காலத்துக்கு முன்பாக இந்த பணிகளை நிறைவேற்றிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மூன்றடைப்பு பகுதியில் நான்குவழிச்சாலையின் குறுக்கே 3 மாதங்களில் பாலம் அமைக்கப்பட்டு விடும். செங்குளம் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கேயும் விரைவில் பாலம் அமைக்கப்படும்.
வேலைவாய்ப்புகள்
இதேபோன்று தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், நாங்குநேரி, கங்கைகொண்டான் பகுதிகளில் ெதாழில்நுட்ப பூங்காக்கள் தொடங்கப்பட்டன. ஆனால் பின்னர் வந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தவில்லை. எனவே மீண்டும் தற்போது தி.மு.க. ஆட்சியில் அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், அந்த திட்டங்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டு உள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக கமிட்டி அமைத்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. அந்த அறிக்கையை பெற்று, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்று நிறைேவற்றப்படும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவும் பகலுமாக தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, ஜோசப் பெல்சி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் ராஜா நம்பிகிருஷ்ணன், மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story