சட்டமன்ற பேரவை உரிமைக்குழு உறுப்பினராக மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நியமனம்
சட்டமன்ற பேரவை உரிமைக்குழு உறுப்பினராக மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டார்.
சேரன்மாதேவி:
தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உரிமைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் அ.தி.மு.க சார்பில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் அவை உரிமைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கிடையே முக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீர்க்க வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் புதிய உறைகிணறு அமைய இருக்கும் இடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான இடங்களையும் ஆய்வு செய்தார்.
அவருடன், முக்கூடல் பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் டி.கே.சுப்பிரமணியன், முக்கூடல் நகர செயலாளர் வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story