திருச்சியில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
திருச்சியில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகினர். புதிதாக 198 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
திருச்சி
இயல்பு நிலை
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றில் இருந்து 137 பேர் குணம் அடைந்ததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
4 பேர் பலி
இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் நேற்று பலியாகினர். தற்போதைய நிலவரப்படி 1,197 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story