நெல்லை- காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கம்
நெல்லை- காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.
நெல்லை:
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட பல்வேறு ரெயில் சேவைகளும் தற்போது படிப்படியாக மீண்டும் இயக்கப்படுகிறது. அதன்படி நெல்லையில் இருந்து வியாழக்கிழமைதோறும் குஜராத் மாநிலம் காந்திதாம் நகரத்துக்கு இயக்கப்பட்ட வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
இதையடுத்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்ட இந்த ரெயிலானது நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், மங்களூரு, பன்வேல், ஆமதாபாத் வழியாக நாளை (சனிக்கிழமை) அதிகாலை 2.26 மணிக்கு காந்திதாம் சென்றடைகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4.40 மணிக்கு காந்திதாமில் இருந்து புறப்படும் ரெயில் நெல்லைக்கு வருகிறது.
Related Tags :
Next Story